- +91 93842 64229
- holyfamilychurch.cn@gmail.com
ஆன்மீகம் வளர்த்தல், பள்ளிகூடம் அமைத்தல், ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடபுத்தகம், கல்வி உதவித் தொகை வழங்குதல், ஏழைகளின் வீடுகளை பழுதுபார்த்தல், இலவச மருத்துவமனை அமைத்தல், முதியோர் இல்லம் அமைத்தல். பங்குமக்களின் நலனுக்காக நூலகம் அமைத்தல் சமூக நலக்கூடம் அமைத்தல், சத்துணவு கூடம், தாய்சேய் நலவிடுதி போன்ற சமூக நல சேவைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்தலே முக்கிய நோக்கமாகும்.
அருட்தந்தை அமல்ராஜ் நேவிஸ் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் அப்போதைய தலைவர் திரு.ஆ. மரிய ஜாண்சன் அவர்கள் முயற்சியால் நன்கொடைகள் பிரிக்கப்பட்டுக் குழந்தை இயேசு குருசடி கட்டப்பட்டது.
1958 இல் நமது பங்கு குருசடியின் திளைப்பங்காகவும் அருட்தந்தை னு.ஊ அந்தோணி அடிகளார் பங்கு தந்தையாகவும் இருந்த காலத்தில் நம் ஆலய வளாகத்தில் 9 அறைகள் கொண்ட சாவடி கட்டப்பட்டது. அதில் நோயாளிகள், பிரசவ கால பெண்கள் வந்து தங்கி சுகமடைந்து செல்வார்கள். சாவடியில் வசிப்பவர்கள் செபிப்பதற்காக அந்தோணியார் குருசடி கட்டலாம் என்று
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேலைவாய்ப்பு தேடி வரும் கட்டிடத் தொழிலாளர்கள் அன்றாடம் அதிகாலை கூடும் இராமன்புதூர் சந்திப்பில், ரீட்டாஸ் கான்வென்டின் முகப்பின், கிழக்கு முனையில் அமைந்துள்ள லூர்து மாதா கெபி, 1978-ஆம் வருடம் ஜூன் 4-ஆம் தியதி அப்போதைய கார்மல் நகர் பங்குத் தந்தை அருட்பணி.
கார்மல் நகர் லிட்டில் பிளவர் தெருவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் குருசடி அன்றாடம் மீன் சந்தைக்கு வந்து செல்லும் ஆயிரக் கணக்கான பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஒரு ஆன்மீக அரணாகவும், வழிபாட்டு மையமாகவும் அமைந்துள்ளது.
கார்மல் நகர் பங்கின் ஐந்தில் ஒரு பங்கு இறைமக்கள் வாழும் பங்கின் இதயப் பகுதியான செயின்ட் மேரீஸ் தெருவில், அருள் பிரகாஷ் தெருவின் கிழக்கு முகப்பும், விற்றில் பிளவர் தெருவின் வடக்கு முகப்பும் இணையும் பகுதியில் புனித சந்தியாகப்பர் குருசடி அமைந்துள்ளது.
இந்த வழிபாட்டுத்தலம் குசையப்பர் குருசடி என்று அறியப்பட்டாலும் நமது பாதுகாவலாய் எழுந்தருளியிருக்கிற பரிசுத்த திருக்குடும்பத்தின் அங்கங்களான மாமுனி சூசையப்பரும் வேளாங்கண்ணி மாதாவாக மரியாவும் மேல்தட்டிலே குழந்தையாக இயேசுவும், புனித டோன் போஸ்கோவோடு ஒருங்கே காட்சியளிப்பது தனிச் சிறப்பு.