- +91 93842 64229
- holyfamilychurch.cn@gmail.com
கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய வளாகத்தில் 2012-ஆம் ஆண்டு மழலையர் பள்ளியாக 2 ஆசிரியைகள் பணி புரிய 25 மாணவர்களுடன் “திருக்குடும்பமழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிஉருவானது. அடுத்த கல்வியாண்டிலேயே Pre.K.G முதல் 5 -ஆம் வகுப்புவரை 90 மாணவர்களுடன். 10 ஆசிரியைகள் பணி புரியும் ஒரு ஆங்கிலத் தொடக்கப் பள்ளியாகவெற்றிநடைபோடத் தொடங்கியது.
இந்த 2023-2024 -ஆம் கல்வியாண்டில், தன் முதல் பத்தாண்டினை நிறைவு செய்யும் நம் பள்ளியில் Pre.K.G முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றுவரும் மாணாக்கரின் எண்ணிக்கை 275 ஆகவும்,ஆசிரியைகளின் எண்ணிக்கை 17 ஆகவும் உயர்ந்திருப்பது இதன் வளர்ச்சியின் ஒருசாதனைக் குறியீடு, ஆசிரியைகளில் 8 பேர் பயிற்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள், 9 பேர் பயிற்சி பெற்ற இளங்கலை பட்டதாரிகள், இவர்களோடு அலுவலகப் பணியாளர் ஒருவரும், ஆயாக்கள் இரண்டு பேரும் பணியில் உள்ளனர். தற்போது திருமதி. டெல்பின் மேரிதலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
மாணவர்களின் கல்விகற்றலில் நவீனதொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ஸ்மார்ட் வகுப்பு (Smart class room) ஒன்று உட்படமுதல் தனத்தில் 6 வகுப்புகளும் அலுவலக அறை உட்பட தரைத்தனத்தில் 6 வகுப்புகளுமாக மொத்தம் 12 வகுப்பறைகள் ஒரு கட்டிடத்திலும், நூலகம் மற்றும் ஆசிரியைகள் அறையென்று 2 அறைகள் தனிக் கட்டிடத்திலுமாக பள்ளி இயங்கி வருகிறது.
அரசாங்கத்தின் கல்வி உரிமைச் சட்டம் (RTE) அடிப்படையில் கல்விக் கட்டணம் அரசாங்கமே வழங்குவதால் மாணவர் சேர்க்கையில் 25 விழுக்காடு ஏழை மாணவர்கள்,கட்டணமில் லாமல் நம் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். மேலும் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திலிருந்துநம் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்குக் கல்விக்கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை ஊர் நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது குறிப்பாக ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திலுள்ள நம் பங்கைச் சார்ந்த மாணாக்கர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் (Tuition Fee) முழுமையாகவிலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சலுகைகளால் நமது கார்மல் நகரைச் சார்ந்த மாணவர்களோடு மேல இராமன்புதூர், தளவாய்புரம், தட்டான்வினை, கோணம், குருசடி, ஆகிய ஊர்களைச் சார்ந்த மாணவர்கள் பயனடைகிறார்கள்.
கல்வித்துறையால் பரிந்துனக்குப்பட்ட அச்சீர் கல்வித்துறையாம் பள்ளியில் பின்பற்றப்படுகிறது. சிறப்பு மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. மேலும் கணினி பயன்பாடு, பொது அறிவு முதலியனவும் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்களின் பன்முகத் திறமையை வளர்த்தெடுக்கும் நோக்கில் யோகா, கராத்தேசிலம்பம், ஓவியம், சதுரங்கம் மற்றும் அபாக்கஸ் வகுப்புகள் நம் பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கிறிஸ்தவ மதிப்பீடுகளை மாணவர்கள் மனதில் பதியவைக்கும் நோக்கில் தினமும் காலை 9.30 மணிமுதல் 10 மணிவரைமுதல் பாடவேளையில் கத்தோலிக்க திருஅவைபாடத்திட்டத்தின்படி மறைக்கல்வி வகுப்பு நடத்தப்படுகிறது.
மனித மைய சமூக மதிப்பீடுகளும் நன்னெறிகளும் அடங்கிய "மதிப்புக் கல்வி" பிற சமய மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
குழந்தைப் பருவத்திலேயே சமூக விழிப்புணர்வு, பொதுஅறிவு, நற்பண்புகள், ஆங்கிலமொழி அறிவு மற்றும் ஒழுக்க நெறிகள் மாணாக்கர் மனதில் பதியும் பொருட்டு மதிய உணவு இடைவேளையின் போது, பொது அறிவு வினாவிடைகள் மற்றும் ஆங்கில உரையாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள் பள்ளியில் ஒலிபரம் செய்யப்படுகின்றன.
வாரத்தின் முதல் நாள் நடத்தப்படும் பொது பள்ளிப்பேரவையில் விவிலியம் வாசித்து விளக்கம் அளித்தல், செய்தித்தாள் வாசித்தல் திருக்குறள் மற்றும் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில உணர இன்றைய சிந்தனை போன்ற நிகழ்வுகளோடு தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதமும் பாடப்படுகிறது பின் உறுதி மொழியும் எடுத்துக்கொள்கிறோம்.
மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றம் மொழிப்புலமை மற்றும் கலைத்திறனை வளர்க்க ஆங்கில இலக்கிய மன்றமும், தமிழ் இலக்கிய மன்றமும் நடத்தப்படுகிறது. மன்ற நிகழ்வுகளை தயாரிக்கவும். நடத்தவும் மாணவர்களுக்கு பயிற்சியும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
பள்ளி நூலகத்தில் மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கும் விதமான பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் 500-க்கும் மேற்பட்டவை உள்ளன. மதிய உணவு மாணவர்கள் இடைவேளையின் போது நூலகத்தை பயன்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது.
கல்வித் தந்தை காமராஜ் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகவும், இந்திய சுதந்திரதின விழா, ஆசிரியர் தினவிழா, குழந்தைகள் தினவிழா, கிறிஸ்மஸ் விழா. பொங்கல் விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா போன்றவை வெகு விமரிசையாக வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு பல்வேறு திறன் போட்டிகள் நடத்தப்பட்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களின் கல்வித் தரத்தையும் வளர்ச்சியைப் பற்றியும் கண்காணிக்கவும். பெற்றோர் ஆசிரியர் இடையிலான நல்உறவை வலுப்படுத்தவும் ஒவ்வொரு கல்விப் பருவத்திலும் ஒரு முறையேனும் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது பெற்றோரிடமிருந்து தலைவர், உபதலைவர். செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் இந்த அமைப்பில், பள்ளி தலைமையாசிரியைச் செயலராகச் செயல்படுகிறார்.
பள்ளி செயல்பாடுகளில் ஆலோசனை வழங்கும் 5 பேர் அடங்கிய கல்விக்குழுவும் அதில் ஒருவர் தாளாளராகவும் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது தாளாளராக முனைவர். பிரகாஷ் அருள் ஜோஸ் செயல்படுகிறார். மேலும் பங்குத்தந்தையும் ஊர்நிர்வாகிகளும்,செயற்குழு உறுப்பினர்களும் பள்ளி வளர்ச்சிக்கு முதுகெலும்பாகச் செயல்பட்டு வருகின்றனர். திருக்குடும்பத்தின் ஆசியோடுநம் பள்ளி மென்மேலும் வளர்ந்துநம் பகுதியில் வாழும் இளம் தலைமுறையினருக்குப் பயன் அளிக்கும் என்பது உறுதி.